24 6725d06e36db1
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் 8ல் புதிதாக களமிறங்கிய 6 போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி

Share

பிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என தகவல் வெளிவந்துவிட்டது. அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறினார் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை, எலிமினேஷன் கிடையாது என உறுதிசெய்யப்பட்டது.

அதே போல் வைல்டு கார்டு என்ட்ரி குறித்தும் நேற்று வெளிவந்த தகவலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. டி.எஸ்.கே, ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய 5 போட்டியாளர்கள் புதிதாக களமிறங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது.

ஆனால், இதில் டி.எஸ்.கே பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியாக வரவில்லை, அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. ஆனால், ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் நால்வருடன் இணைந்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராயன் மற்றும் ரீடா தியாகராஜன் என்பவரும் வைல்டு கார்டு என்ட்ரியில் வந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக 6 பேர் களமிறங்கியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் பிக் பாஸ் களம் இனி வரும் நாட்களில் எப்படி இருக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...