சினிமாசெய்திகள்

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

8 35
Share

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதன்பின் அர்னவ் எலிமினேட் ஆனார். ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என துவங்கிய பிக் பாஸ் 8, தற்போது பெண்கள் 9 பேர் மற்றும் ஆண்கள் 7 பேருடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களே வைல்டு கார்டு என்ட்ரி குறித்து பேச துவங்கிவிட்டனர். இப்படியிருக்க இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்களின் என்ட்ரியை எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என கூறப்படும் நிலையில், அதில் ஒருவராக ஸ்வாகதா என்பவர் வரலாம் என கூறப்படுகிறது. ஸ்வாகதா பின்னணி பாடகி ஆவார்.

மேலும் கடந்த பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை மாயாவை அனைவருக்கும் நினைவு இருக்கும். அவருடைய அக்கா தான் இந்த ஸ்வாகதா. இவர் பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியில் வருவார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...