33 5
சினிமா

நடிகர் விக்ரமிற்கு வந்த ரூ. 1000 கோடி பட்ஜெட் படம்… அப்படி என்ன படம்?

Share

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு ஸ்கோப் இருக்கும் படங்களாக தேர்வு செய்து ரசிகர்களை அசத்தி வருபவர் தான் நடிகர் விக்ரம்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றதா என்றால் இல்லை ஆனால் இவரது நடிப்பை, உழைப்பை பாராட்டாத ரசிகர்கள் இல்லை.

தற்போது இவருக்கு ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்ஆர்ஆர் பட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்ட படம் இயக்கி வருகிறர்.

பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் தான் விக்ரமை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

மகேஷ் பாபுவின் மாஸ் இமேஜுக்கு நிகரான ஒரு கோலிவுட் நடிகரை தேர்வு செய்ய விரும்பிய ராஜமௌலி, விக்ரம் அதற்கு கச்சிதமாக பொருந்துவார் என கருதி உள்ளாராம்.

இந்த கூட்டணி உறுதியானால் மகேஷ் பாபுவும் விக்ரமும் முதல் முறையாக இணையும் படமாக இது இருக்கும். ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
40 2
சினிமா

மாமன் திரைவிமர்சனம்

சூரி – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில்...

39 2
சினிமா

சமந்தாவுக்கும் புது காதலருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?

நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக [கிசுகிசுக்கப்பட்டு வருகிறது....

36 3
சினிமா

அரசியல் பிரச்சாரத்தை தாண்டி சினிமாவில் விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா?

நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில்...

37 3
சினிமா

நான் அழுதேன், சிரித்தேன், ஒவ்வொரு நாளும்.. ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர்,...