சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படிப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
தளபதி ரசிகர்களின் ‘பீஸ்ட்’ பட எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் தற்போது படக்குழு படத்தின் பாடல்கள் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் மொத்தமாக 4 பாடல்கள் மற்றும் இரண்டு தீம் டிராக்குகள் உள்ளன. இவற்றில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டு விட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தப் படத்தில் உள்ள இரண்டு பாடல்களில் ஒன்றை தனுஷ் எழுதி அவரே பாட உள்ளார் என அண்மையில் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் படத்தின் இன்னொரு பாடல் தொடர்பில் மாஸ் தகவல் கசிந்துள்ளது, இப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத விஜய் பாடவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். அத்துடன் படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து காத்திருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.