சினிமாசெய்திகள்

பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்

Share
tamilni 386 scaled
Share

பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்

பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில் தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் குறித்து போட்டியாளர்கள் கூறினர்.

அதில் பிக்பாஸ் 7 விசித்ரா பேசும்போது, தான் நடிப்புக்கு வந்த புதிதில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் ஒருவர் தனது அறைக்கு அழைத்தார்.

அதோடு படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் இதனை இயக்குனரிடம் கூறியபோது அடித்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

அவர் யாரை கூறினார், எப்போது அந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல் பரவி விட்டது. அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஏன் எதையும் தட்டி கேட்கவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை விசித்ராவின் கணவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், இந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம், அதை மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கும் போது விசித்ரா ஏன் இதை சொன்னார் என்பது தெரியவில்லை, எனக்கே பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.

என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு கல்லூரிக்கு கூட போகவில்லை, மனமுடைந்து விட்டான், இனிமேல் தான் நான் அவரிடம் இதைப் பற்றி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

 

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...