சினிமாசெய்திகள்

மலையாள நடிகையை அடித்த இயக்குநர் பாலா! வணங்கான் படத்திலிருந்து விலக இது தான் காரணமா?

Share
tamilni Recovered 28 scaled
Share

மலையாள நடிகையை அடித்த இயக்குநர் பாலா! வணங்கான் படத்திலிருந்து விலக இது தான் காரணமா?

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவரே இயக்குநர் பாலா. கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கி வெற்றிகண்ட பாலா சேது என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதாவது விக்ரம் நாயகனாக நடித்த அப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தந்தது. அதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து ‘நந்தா’ என்ற படத்தை இயக்கினார். அப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு சிறந்த நடிகராக சூர்யாவிற்கு அடையாளத்தை கொடுத்தது.

இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் பாலா இயக்கும் வணங்கான் படத்தில் ஏற்கனவே சூர்யா நடிக்க நிலையில், அவர் விலகியதன் காரணமாக அருண்விஜய் அந்த படத்தில் நடிக்கிறார். அண்மையில் வணங்கான் படத்தின் ட்ரைலர் வெளியாகி மிரட்டி இருந்தது.

அத்துடன், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை மமிதா. அவரும் வணங்கான் படத்தில் நடித்து, விலகி இருந்தார்.

இந்த நிலையில், வணங்கான் படத்தில் இருந்து விலகியது தொடர்பாக நடிகை மமிதா பைஜூ கேள்வி கேட்டபோது, இவ்வாறு கூறியுள்ளார்.

அதாவது, வணங்கான் படத்தில் முதலில் நான் நடித்திருந்தேன். அப்படத்தில் ஒரு பாடலுக்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும் என்றிருந்தது. நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் உடனே அதை செய்துகாட்டும்படி இயக்குனர் கூறினார்.

நான் அதற்கு தயாராக இல்லை என்பதால் பதற்றமாகிவிட்டேன். அச்சமயம் எனக்கு பின்னாலிருந்த அவர் (பாலா) என்னை  தோள்பட்டையில் அடிப்பார். ‘நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என அவரே (இயக்குநர் பாலா) கூறுவார்…

சில நேரங்களில் அடித்தும் உள்ளார். சூர்யா சார் ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் புதிதாக இணைந்த எனக்குதான் அது புதிதாக இருந்தது. என்று கூறியுள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...