போட்டோவுடன் சந்தோஷ செய்தியை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா- குவியும் வாழ்த்து
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி.
சுஜித்ரா மற்றும் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் இப்போது பாக்கியாவிற்கு எதிராக கோபியும் சமையல் பிசினஸ் தொடங்கியுள்ளார். அவருக்கு அவரது குடும்பம் பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பாக்கியாவின் ரெஸ்டாரன்டிற்கு கூட்டமே இல்லை, எனவே சமைப்பதை மிகவும் குறைவு செய்துள்ளனர்.
வரும் நாட்களில் பாக்கியா தொழிலில் மேலே வருவாரா அல்லது கோபி சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா. திருமணத்திற்கு பிறகு இவர் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
அவ்வப்போது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
000
- 70 mm cinema
- Baakiyalakshmi
- breaking news
- cinema
- cinema gossip 70mm
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- kapamilya news
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- latest tamil news
- News
- news in tamil
- news tamil
- news18 tamil nadu news
- pinoy showbiz news
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil live news
- tamil nadu news
- Tamil news
- Tamil TV Serials
- today tamil news
- trending news
- viral news