நிலாவுக்காக பல்லவன் செய்த விஷயம், சந்தோஷத்தில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ

Murder Recovered Recovered 10

அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் தொடர்.

குடும்ப கதை என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ளது.

எதிர்ப்பாரா விதமாக தனது வீட்டிற்கு கார் ஓட்ட வந்த டிரைவரை திருமணம் செய்த பெண் அவரின் வீட்டிற்கு வந்து வாழும் கதையை நோக்கி அய்யனார் துணை உள்ளது.

கடைசியாக ஏற்காடு சுற்றுலா சென்ற கதை தான் ஒளிபரப்பானது. அங்கு நிலா அம்மா-அப்பா குடும்பத்துடன் வர சில சண்டைகளுடன் இரு வீட்டாரின் சுற்றுலா முடிவுக்கு வந்தது.

இன்றைய எபிசோடில் நிலாவின் அண்ணி வீட்டிற்கு வருகிறார். அந்த வீடு, கழிவறை போன்றவற்றை பார்த்து நிலா எப்படி வாழ்ந்தவள், இந்த வீட்டில் எப்படி உள்ளார் என வருத்தம் அடைகிறார்.

சோழனை அழைத்து நிலாவிற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்து பேசுகிறார். சோழன் தனது அண்ணன்-தம்பிகளுடன் கழிவறை கட்டியே ஆக வேண்டும் என கூற பல்லவன் தனது கையில் இருந்து பணத்தை கொடுக்கிறார்.

Exit mobile version