சினிமாசெய்திகள்

மீண்டும் அதே நடிகருடன் கூட்டணி அமைக்கும் அட்லீ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

5 37
Share

மீண்டும் அதே நடிகருடன் கூட்டணி அமைக்கும் அட்லீ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கம்போக்களில் ஒன்று விஜய் – அட்லீ. இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் தெறி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மெர்சல், பிகில் ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்தனர்.

இதன்பின் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கி வெற்றிகொடுத்த நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கப்போகும் படம் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து வெளிவந்த தகவலில் சல்மான் கான் மற்றும் கமல் ஹாசனை வைத்து தான் தனது அடுத்த படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில், இப்படம் தொடர்பான வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், கமல் – சல்மான் கான் – அட்லீ இணையும் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிக்க போகிறார் என கூறுகின்றனர்.

அரசியல் செல்லும் காரணத்தினால், தளபதி 69 தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ள நிலையில், அட்லீ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...