அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ யார்? சல்மான் கானும் இல்லை.. கமல் ஹாசனும் இல்லை..

24 66a9b62277d4d

அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ யார்? சல்மான் கானும் இல்லை.. கமல் ஹாசனும் இல்லை..

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றி, இயக்குனர் அட்லீயை பாலிவுட் திரையுலகின் முக்கிய இயக்குநராகவே மாற்றிவிட்டது. அடுத்ததாக இவர் யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கானுடன் அட்லீ இணையப்போவதாக கூறப்பட்டது. மேலும் கமல் ஹாசனை வைத்தும் அட்லீ இயக்கப்போகிறார் என தொடர்ந்து பல தகவல்கள் இதுபோல் வெளிவந்தது. ஆனால், இவை யாவிற்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் நடிகர் சூர்யாவுடன் அட்லீ இணையப்போகிறார் என்பது தான். சூர்யா விரைவில் பாலிவுட் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த சூழலில் சூர்யாவை வைத்து தான் அட்லீ அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகவும், அனிருத் தான் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version