வசமாக சிக்கிய அட்லீயின் ஜவான்!! இதுவும் காப்பியா?
அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மேலும் நடிகை தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர், ரசிகர்களை முழு திருப்திபடுத்தியுள்ளது.
அட்லீ இயக்கும் படங்கள் மீது தொடர்ந்து காப்பி என்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் எழுந்துகொண்டே தான் இருக்கிறது.
பல இயக்குனர்கள் மீது இந்த சர்ச்சை இருந்தாலும், அட்லீ மீது மட்டும் அதிக கவனத்தை வைத்து, அவருடைய படம் எப்போதெல்லாம் வெளியாகிறோதோ, அப்போதெல்லாம் நெட்டிசன்கள் இந்த காட்சி அந்த படத்திலிருந்து எடுத்து என சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் ஜவான் டிரைலரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அந்நியன், பாகுபலி, Moon Knight, வலிமை, Dark Man போன்ற படங்களில் இருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என கூறி சர்ச்சை எழுந்துள்ளது.
Leave a comment