அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

MediaFile 19

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச் சூழலில், ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம், நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ (Super Hero) எனப் பெயரிடப்பட்டுள்ளது. படக்குழு இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். நடிகை தேஜு அஷ்வினி மற்றும் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தை விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம்.

இந்தப் படத்தின் தலைப்பே ‘சூப்பர் ஹீரோ’ என்று இருப்பதால், இது ஒரு சூப்பர் ஹீரோ கதையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸை வைத்து ‘மின்னல் முரளி’ (Minnal Murali) திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைப் போல, இந்தப் படமும் தமிழில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version