GOAT படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

24 66a728d1a45f2

GOAT படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

இப்படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தகவல் கூறுகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். ஆனால், இப்படத்தில் VFX காட்சிகளின் வேலை இன்னும் நிறைவு பெறாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பேசியுள்ளார். இதில் படம் சொன்னபடி செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என தெளிவாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இதன்மூலம் GOAT படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவில்லை, செப்டம்பர் 5ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என தெரிகிறது.

Exit mobile version