சினிமாசெய்திகள்

சூர்யா 45ல் இருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான்.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்

1 eree
Share

சூர்யா 45ல் இருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான்.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா, புதிதாக கமிட் செய்திருக்கும் படம் சூர்யா 45. நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து, படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் த்ரிஷா, லப்பர் பந்து கதாநாயகி ஸ்வாசிகா, காளி வெங்கட், காஷ்மீரா ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

ரஹ்மான் – ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு கமிட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

வெளிவந்த அறிவிப்பு போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு முன் வந்த அனைத்து போஸ்டர்களிலும் ரஹ்மானின் பெயர் இடம்பெற்று இருந்த நிலையில், இந்த போஸ்டரில் பெயர் இடம்பெறாமல் இருந்தது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியுடன் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தகவல் வெளிவந்த நிலையில், சினிமாவிலிருந்து ஓராண்டு ஓய்வு எடுக்கப்போவதாக கூறப்பட்டது.

அதற்காக தான் தற்போது இப்படத்திலிருந்து விலகி இருக்கிறாரா? அல்லது படக்குழுவுடன் வேறு ஏதேனும் பிரச்சனையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சூர்யா 45 படக்குழுவினர் விரைவில் விளக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...