New Project 30
சினிமாசெய்திகள்

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்- அட்டகாசமாக நடந்துள்ள Haldi கொண்டாட்டம், போட்டோஸ்

Share

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்- அட்டகாசமாக நடந்துள்ள Haldi கொண்டாட்டம், போட்டோஸ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கவின் ஜோடியாக நடிக்க இருவரின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனது.

படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் நடிக்கவில்லை.

இந்த நிலையில் அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

அபர்ணா தாஸின் காதலர் தீபக் பரம்போல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நாளை இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...

02 25
செய்திகள்உலகம்

எண்ணெய் விலை உயர்வு: அமெரிக்காவின் கையிருப்பு ஒரு ‘உளவியல் தாக்கம்’ மட்டுமே

ஈரான் மீதான போரின் தாக்கம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை குறித்து, ‘குளோபல் எகனாமிக் அட்வைசர்ஸ்’...

02 24
உலகம்செய்திகள்

தங்கமீனின் வினோத கின்னஸ் உலக சாதனை: காரை ஓட்டிச் சென்று அசத்திய ‘பிளப்’!

தங்கமீன்கள் பொதுவாகத் தொட்டிக்குள் நீந்துவதையே நாம் கண்டிருப்போம். ஆனால், ‘பிளப்’ (Blub) என்ற ஒரு வினோதத்...