‘அரசன்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்துக்குச் சம்பளம் இல்லை? – ஆடியோ உரிமையே ஊதியமாகக் கிடைத்ததா!

25 6916bfa50c8f3

‘விடுதலை 2’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு (STR) நடிக்கவுள்ள புதிய படமான ‘அரசன்’ குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தமிழ் சினிமாவில் முதன்முறையாக வெற்றிமாறன் – அனிருத் கூட்டணி இப்படத்தில் இணைகிறது.

சில வாரங்களுக்கு முன் வெளியான படத்தின் அறிவிப்பு வீடியோவில், அனிருத்தின் இசை மிகவும் மாஸாக இருந்தது என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

பொதுவாக இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘அரசன்’ படத்திற்காக அனிருத்துக்குச் சம்பளம் எதுவும் ரொக்கமாகத் தரவில்லையாம். அதற்குப் பதிலாக, ‘அரசன்’ படத்தின் ஆடியோ உரிமையை (Audio Rights) மட்டுமே அவருக்கு ஊதியமாகக் கொடுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆடியோ உரிமைகள் மூலம் கணிசமான வருமானத்தை அனிருத் ஈட்ட முடியும் என்பதால், இந்த ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் சாதகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Exit mobile version