கமல் ஹாசனை விட மிக மிக குறைவான சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன்.. எவ்வளவு தெரியுமா
பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எந்த படமும் வெற்றியடையவில்லை. இதை தொடர்ந்து அடுத்ததாக சலார் திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் Project K திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உலகநாயகன் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இதற்காக ரூ. 150 கோடி சம்பளம் கமலுக்கு பேசப்பட்டுள்ளது.
மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சன் ரூ. 20 கோடி தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசனை விட குறைவான சம்பளம் தான் அமிதாப் வாங்கியுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.
Leave a comment