24 6708bc96cecb1
சினிமாசெய்திகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா

Share

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா

பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரை வாழ்க்கையை 1969ல் துவங்கினார். இன்று வரை தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

நேற்று வெளிவந்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடிகர் அமிதாப் பச்சனின் 82வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 3300 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மும்பையில் இருக்கும் அமிதாப் பச்சனின் பங்களா வீட்டின் மதிப்பு ரூ. 112 கோடி இருக்கும் என்கின்றனர். Kaun Banega Crorepati நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஒரு எபிசோடிற்கு ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

ரூ. 3 கோடி மதிப்புள்ள Range Rover, ரூ. 3 முதல் ரூ. 4 கோடி மதிப்புள்ள Bentley, ரூ. 9 கோடி மதிப்புள்ள Rolls Royce உள்ளிட்ட பல விலைஉயர்ந்த கார்களையும் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ. 260 கோடி மதிப்புள்ள Private jet ஒன்றையும் வைத்துள்ளாராம்.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2026 01 02 at 9.40.39 AM
செய்திகள்அரசியல்இலங்கை

மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரரைச்...

images 4
விளையாட்டுசெய்திகள்

டுபாயில் புத்தாண்டை வரவேற்ற கிங் கோலி: வைரலாகும் அனுஷ்காவுடனான கியூட் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, தனது 2026-ம் ஆண்டு புத்தாண்டை மனைவி அனுஷ்கா சர்மா...

images 3
செய்திகள்இலங்கை

வீதி விபத்துகளுக்கு 85% மனநிலை மற்றும் ஒழுக்கமின்மையே காரணம்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

புத்தாண்டில்  பதிவான போக்குவரத்து விபத்துகளில் 85 சதவீதம் மட்டுமே மன ரீதியான காரணங்களால் பதிவான குற்றங்களாக...

compu 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: இலங்கை CERT எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த 2025-ம் ஆண்டில் சமூக ஊடகத் தவறான பயன்பாடு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான...