24 67233b8f39982
சினிமா

அமரன் திரைவிமர்சனம்

Share

உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன்.

இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள அமரன் படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார்.

காதல் ஒரு பக்கம் இருந்தாலும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். அவர்களுடைய காதலிக்கு முகுந்த் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது.

முகுந்த் ராணுவ வீரன் என்பதால் இந்துவின் தந்தை அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எப்படியோ பல போராட்டங்களுக்கு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் முகுந்த் – இந்துவின் திருமணம் நடைபெறுகிறது.

ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட் இணையும் முகுந்த், பின் கேப்டனாக பதவி ஏற்க, அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை என்கவுண்டர் செய்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். இந்த சம்பவத்திற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை ராணுவ படமாக மட்டுமே காட்டாமல், முகுந்த் – இந்து இருவருக்கும் இடையே இருக்கும் காதலை வைத்து திரைக்கதையை அழகாக வடிவமைத்துள்ளார்.

போர்க்களத்தில் முகுந்த் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், வீட்டில் இந்துவின் தவிப்பை காட்டிய விதம் மிகவும் எமோஷனலாக இருந்தது. கல்லூரியில் தொடங்கி முகுந்தின் மரணம் வரை இருவருக்கும் இடையே இருந்த காதல், முகுந்தின் மறைவு பின்பும் அவரை எந்த அளவிற்கு இந்து காதலித்து கொண்டு இருக்கிறார்கள் என்று காட்டிய விதமும் அருமையாக இருந்தது.

திரைக்கதையில் சில இடங்கள் தொய்வாக இருந்தாலும் அவை யாவும் மிகப்பெரிய மைனஸாக தெரியவில்லை. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் கமர்ஷியலுக்காக எதுவும் செய்யாமல், எதார்த்தமாக இப்படத்தை எடுத்ததற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டு.

இடைவேளை காட்சி எந்த அளவுக்கு மாஸாக இருந்ததோ, கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நெகிழ வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தான் இறந்து பிறகு, தன் மனைவி யார் முன்பும் கண்ணீர் விடக்கூடாது என முகுந்த் சொன்ன வார்த்தையை மனதில் வைத்து இந்து நடந்துகொண்ட விதம் மிகவும் எமோஷனலாக இருந்தது.

OM2JBDதந்தையின் மறைவு அறியாத குழந்தை ‘அப்பாவுக்கு அடுத்த விடுமுறை எப்போது’ என்று தாயிடம் கேட்கும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது. தனது குடும்பத்தை பிரிந்து ராணுவத்திற்கு எப்போது சென்றாலும், கண் கலங்காத முகுந்த், இறுதியாக தனது மனைவி, குழந்தை, தாய், தந்தையை விமான நிலையத்தில் சந்தித்துவிட்டு செல்லும் போது கண்கலங்கிய காட்சிகளை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அழகாக எடுத்திருந்தார்.

முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் சிலிர்க்க வைத்துவிட்டார் கதாநாயகன் சிவகார்த்திகேயன். ஒரு பக்கம் சிவாவின் நடிப்பு பட்டையை கிளப்பி கொண்டு இருந்தாலும், மற்றொரு புறம் அவரை மிஞ்சும் அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார் இந்து கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி. இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பாராட்டுக்கள்.

அதே போல் முகுந்த் வரதராஜனுக்கு எப்போது பக்கபலமாக துணை நின்று விக்ரம் சிங் கதாபாத்திரமும் சிறப்பாக இருந்து. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த பூவன் அரோராவுக்கு தனி பாராட்டு.

கண்டிப்பாக அமரன் படம் முகுந்த் வரதராஜனுக்கு சிறந்த சமர்ப்பணமாக அமையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய ராணுவத்திற்காக உயிர்நீத்த முகுந்த் வரதராஜன் போல் இன்னும் ஏராளமானோர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுடைய கதையும் மக்களுக்கு படங்கள் மூலம் தெரிய வந்தால், அது அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

படத்தின் அடுத்த ஹீரோ ஜிவி பிரகாஷ் குமார். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி மிரட்டி விட்டார். எமோஷனல் காட்சிகள், காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளார், வேற லெவல். ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளனர் அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் Stefan Richter. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல் எடிட்டிங் சூப்பர்.

பிளஸ் பாயிண்ட்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பு
ராஜ்குமார் பெரியசாமி திரைக்கதை
எமோஷனல் காட்சிகள், இராணுவ காட்சிகள்
ஸ்டண்ட்
பாடல்கள், பின்னணி இசை
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றும் இல்லை

மொத்தத்தில் அமரன் ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை. அனைவரும் பார்க்கவேண்டிய படம்..

Share

Recent Posts

தொடர்புடையது
Sandy Master plays the female role
சினிமாபொழுதுபோக்கு

சுமார் மூஞ்சி குமாருக்குப் பதிலாக சாண்டி மாஸ்டர்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ உருவாகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’...

25 691f126a70d10 md
சினிமாபொழுதுபோக்கு

மருதநாயகம் படம் சாத்தியமாகலாம்: கோவாவில் கமல் ஹாசன் புதிய நம்பிக்கை!

சினிமாவின் மீது தீராத காதல் கொண்டுள்ள பிரபலங்களில் ஒருவரும், இந்திய சினிமாவின் முன்னணி நடிகருமான கமல்ஹாசனின்...

25 691c8fc6d2dda
சினிமாபொழுதுபோக்கு

நடிகை மான்யா ஆனந்த் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ‘போலிக் கமிட்மென்ட் அழைப்புகள் என் பெயரில் வரவில்லை’ – தனுஷின் மேனேஜர் அறிக்கை!

நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் (Sreyas) பெயரில் பட வாய்ப்புக்காகக் கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) கேட்டதாகச் சீரியல்...

lights on. camera rolling. shoot starts today for project no.7.featuring the elegant and ench
சினிமாபொழுதுபோக்கு

லோகா படத்தின் நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் புதுப் படம் ஆரம்பம் – SR பிரபு தயாரிப்பில் பெண்கள் மையக் கதை!

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த மலையாளத் திரைப்படமான ‘லோகா’ (Loka), கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி...