1 8
சினிமாசெய்திகள்

7 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

7 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது அமரன் படம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் ராஜ்கமல் நிறுவனம் மூலம் உலகநாயகன் கமல் ஹாசன் இப்படத்தை தயாரிக்க ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், 7 நாட்களில் அமரன் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமரன் படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் இந்த அளவிற்கு வசூல் சாதனை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...