36 2
சினிமா

நான் நடிகை என்பது என் கணவருக்கு தெரியாது! மனம் திறந்து பேசிய அமலா பால்

Share

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை அமலா பால் கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அமலா பால், தனது கணவர் குறித்து மனம் திறந்து பேசினார்.

இதில் “முதன் உதலில் நானும் என் கணவர் கோவாவில் சாதித்தோம். அவர் குஜராத்தி என்றாலும் கோவாவில் தான் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்திய படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் நான் ஒரு நடிகை என்பதே அவருக்கு தெரியாது. நானும் அதை காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பின்தான் அவருக்கு தெரிய வந்தது.

நான் கர்ப்பகாலத்தில் இருக்கும்போது தான் என்னுடைய படங்களை பார்த்தார். அவருக்கு விருது நிகழ்ச்சிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்ப்பெட்டில் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாக பார்த்தார்” என அமலா பால் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...