அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்.. யார் தெரியுமா?

ajith hd dancing kvyoajko9hhp0qxg

அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்.. யார் தெரியுமா?\

தற்போது நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பின்னர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் அஜித்தின் 64 வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு சிறுத்தை – அஜித் கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version