விடாமுயற்சி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாப்பட்டு வருபவர் நடிகர் அஜித்.
சமீபகாலாமாக கடவுளே அஜித்தே என்கிற கோஷம் படுவைரலாகி வந்தது. இது இனிமேலும் தொடரக்கூடாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஜித்.
இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
இப்படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க, த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்த முதல் விமர்சனத்தில், படம் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் வெற்றி என உறுதியாக கூறியுள்ளனர். இதன்மூலம் விடாமுயற்சி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.