tamilni 311 scaled
சினிமாசெய்திகள்

மார்க் ஆண்டனி இயக்குனருடன் கைகோர்க்கவிருக்கும் அஜித்.. தல ரசிகர்களுக்கு ரீட்

Share

மார்க் ஆண்டனி இயக்குனருடன் கைகோர்க்கவிருக்கும் அஜித்.. தல ரசிகர்களுக்கு ரீட்

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அசர்பைஜானில் நடைபெறவுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா, ஹுமா குரேஷி, சஞ்சய் தத், ஆரவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். அசர்பைஜானில் 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின் சென்னையில் 10 நாட்கள் விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பல பேட்டிகளில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அஜித் சார் தான் முக்கிய காரணம் என கூறி வருகிறார்.

அவர் தான் மார்க் ஆண்டனி போன்ற படத்தை எடுக்க தன்னை ஊக்குவித்தார் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் கதை ஒன்றை கூறியுள்ளாராம்.

கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என அஜித்தும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணைய அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கூட்டணி அமைகிறதா என்று.

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...