அஜித்தின் ரெட் படத்தில் அவருடன் நடித்த இந்த நாயகியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

24 6617ba5d79aca

அஜித்தின் ரெட் படத்தில் அவருடன் நடித்த இந்த நாயகியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

நடிகர் அஜித் நடித்த பல படங்களை இப்போதும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.

ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆனால் அதனை முதல் நாள் ரிலீஸ் போல வெடி, மேளம் என கொண்டாடி மகிழ்கிறார்கள் ரசிகர்கள்.

அப்படி அஜித் நடித்த முக்கிய படங்களில் ஒன்று ரெட். சிங்கம்புலி இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித், ப்ரியா, ரேவதி என பலர் நடித்துள்ளனர்.

மாடல் அழகியாக இருந்த பிரியா கில்லுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான தேரி மேரா சப்னா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அகத்தியன் இயக்கிய சிர்ஃப் தும் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதால் அதில் நடித்த பிரியா கில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அஜித் நடிப்பில் வெளியான ‘ரெட்’ படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் இல்லை என்றாலும் ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு டென்மார்க்கில் செட்டிலானவர் அங்கு ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

 

Exit mobile version