30 1
சினிமா

‘ரசிகர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார்’ – நடிகை சினேகா

Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கார் ரெஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருதையும் வென்றார்.

அஜித் குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை சினிமா அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

நடிகை சினேகா அஜித்துடன் ஜனா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் குறித்து தான் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது “படப்பிடிப்பில் அஜித் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவார்கள். அவர்களிடம் அஜித் அமைதியாக லைனில் வாங்க, நான் போட்டோ கொடுக்கிறேன் என்பார். படப்பிடிப்பு முடிந்து பொறுமையாக இருந்து அனைவரிடமும் போட்டோ எடுத்துக்கொண்டு தான் செல்வார்.

அவ்வளவு பொறுமையாக ஓவ்வொரு ரசிகருடனும் அஜித் போட்டோ எடுத்துக்கொள்வார். அதை பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவ்ளோ எளிமையாக அஜித் இருப்பார். அவரை போல அவரின் ரசிகர்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...