25 684525ecd681f
சினிமாசெய்திகள்

24 ஆண்டுகளை கடந்த அஜித்தின் சிட்டிசன் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

Share

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று சிட்டிசன். இயக்குநரும், நடிகருமான சரவண சுப்பையா இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி வெளிவந்தது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வசுந்தரா தாஸ், மீனா, நக்மா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இன்றுடன் சிட்டிசன் திரைப்படம் வெளிவந்த 24 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 24 ஆண்டுகளை கடந்திருக்கும் சிட்டிசன் திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ. 16 கோடியாகும்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...