சினிமா

‘காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம்’.. ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்

8 3
Share

சினிமா, கார் ரேஸிங் என இரண்டிலும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார் அஜித் குமார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்தது.

பத்ம பூஷன் விருது வாங்கிய கையோடு பேட்டியளித்திருந்தார். கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பின் அஜித் பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த பேட்டியில் தனது சினிமா வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்படி பல விஷயங்களை கூறிய அஜித் தனது ஓய்வு குறித்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கு தத்துவம் பேசவில்லை” என கூறியுள்ளார்.

ஓய்வு குறித்து அஜித் பேசிய இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...