4 15
சினிமாசெய்திகள்

இந்த கெட்ட பழக்கத்தை விட்டுவிடுங்க.. பிரபல நடிகருக்கு அட்வைஸ் செய்த அஜித்

Share

இந்த கெட்ட பழக்கத்தை விட்டுவிடுங்க.. பிரபல நடிகருக்கு அட்வைஸ் செய்த அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டும் இன்னும் மீதமுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

அஜித்துடன் இணைந்து நடித்த பலரும் அவரை பற்றி புகழ்ந்து பேசியிருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் பிரபல நடிகர் ரோபோ ஷங்கர், அஜித்துடன் இணைந்து நடித்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதில், “ஒரு முறை என்னிடம் தம் அடிக்க போறீங்களா என அஜித் கேட்டார். ஆம் என்றேன், அதற்கு அவர் அந்த தம்-ஐ என்னிடம் கொஞ்சம் குடுங்க என கேட்டார். அப்போது அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர், ‘சார் மேடமுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும், நீங்க இத நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது’ என கூறினார். அதற்கு அஜித் சார் ‘அடிக்கலங்க அத கொண்டு வாங்க’ என சொன்னார். அந்த தம்-ஐ என்னிடம் இருந்து வாங்கி பார்த்துக்கொண்டே இருந்தார். ‘எப்படியெல்லாம் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தேன் தெரியுமா’ என அஜித் கூறினார்”.

“அந்த சிகரெட்டை அப்படியே அவரிடம் இருந்து வாங்கி, அதனை பத்திரமாக வைத்திருக்கிறேன். அதன்பின் தான் அஜித் சார் சொன்னார், நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் இதை விட்டுவிடுங்கள் ஷங்கர்” என அஜித் கூறியதாக ரோபோ ஷங்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 2
செய்திகள்இலங்கை

இந்தியப் பாய்மரக் கப்பல் ‘ஐஎன்எஸ் தரங்கினி’ இலங்கை வருகை: கடற்படை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகள்!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐஎன்எஸ் தரங்கினி’ பாய்மரப் பயிற்சிக் கப்பல், நாளை பிப்ரவரி 27 முதல்...

15 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீனவர்களுக்கு நற்செய்தி: நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகும் மீனவர்களுக்கு ரூ. 1.2 மில்லியன் காப்பீடு அறிமுகம்!

வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

lan
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இந்தியாவில் சிக்கிய ‘போடி லாசி’: நாடு கடத்த சிஐடி அதிகாரிகள் இந்தியா விரைவு!

இலங்கையின் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘போடி லாசி’ என...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....