சினிமாசெய்திகள்

விஜய் இடத்தை பிடித்த அஜித்.. முதல் முறையாக வெளிவந்த உண்மை

Share
24 663706d275028
Share

விஜய் இடத்தை பிடித்த அஜித்.. முதல் முறையாக வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விஜய் மற்றும் அஜித். விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய்க்கு சொன்ன கதையில் அஜித் நடித்த தகவல் குறித்து பிரபல இயக்குனர் சுந்தர் சி, பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அது என்ன விஷயம் என்று பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் சுந்தர் சி ஒரு முறை விஜய்யை சந்தித்து படம் பண்ணுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். படத்தின் கதைக்களம் கூறி, வருடத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் சுந்தர் சி-யை நடிகர் அஜித் நேரில் சந்தித்து, நாம் இருவரும் ஒரு படம் பண்ணலாமா என கேட்டுள்ளார். விஜய்யுடன் வருட கடைசியில் தான் படம் பண்ண போகிறோம், அதற்குள் அஜித்துடன் ஒரு படம் பண்ணிவிடலாம் என முடிவு செய்துள்ளார் சுந்தர் சி.

ஆகையால், விஜய்க்கு சொன்ன கதையில் அஜித்தை நடிக்க வைத்து எடுத்துள்ளார். அது தான் உன்னைத்தேடி திரைப்படம் தான். இதன்பின் சுந்தர் சி-யம் விஜய்யும் இணையமுடியாமல் போய்விட்டது.

இதே போல் மூன்று முறை விஜய்யும், சுந்தர் சி-யும் இணைந்து படம் பண்ணலாம் என திட்டமிட்ட போதெல்லாம், அது நடக்காமல் போய்விட்டது. இதை இயக்குனர் சுந்தர் சி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...