பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதரி மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சிக்கலைப் பகிர்ந்துகொண்ட நிலையில், இப்போது நடிகை ஸ்ரேயா சரண் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி யாரோ ஒருவர் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தொழில்முறை நபர்களைத் தொடர்புகொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயா சரண்: வாட்ஸ்அப்பில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி யாரோ ஒருவர் மக்களைத் தொடர்பு கொண்டு வருகிறார் என்றும், தான் இதில் ஈடுபடவில்லை என்றும் நடிகை ஸ்ரேயா சரண் கூறினார்.
முன்னதாக, நடிகை அதிதி ராவ் அவர்களும் யாரோ ஒருவர் ‘வாட்ஸ்-அப்’ மூலமாகப் போட்டோகிராபர்களைத் தொடர்புகொண்டு, தான் பேசுவது போல ‘போட்டோஷூட்’ குறித்துப் பேசி வருவதாகவும், அது தான் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
பொதுவெளியில் இருக்கும் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியாகத் தவறான தொடர்புகளை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள், திரையுலகில் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

