இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.
தற்போது இவர் அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் ‘வ்வான்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
பாலாஜி டெலிபிலிம்ஸ் மற்றும் டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி வெளியாகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.