அஜித்துக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்களா.. பிரபல நடிகை கூறிய ரகசியம்

24 66e51208508f8

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுமித்ரா. இவர் 70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவளும் பெண் தானே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். நடிப்பை நடிப்பாகவே பார்க்க வேண்டும் என்ற தெளிவுடன் இருந்த இவர் பிறகு அம்மா ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில், அஜித்திற்கு அம்மாவாக வலிமை படத்தில் நடித்த இவர், ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி ஒரு ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், “அஜித் ஒரு பெரிய நடிகர் போன்று நடந்துகொள்ளமாட்டார் அவர் மிகவும் சிறந்த மனிதர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் அன்பாக பார்த்துக்கொள்வார். குடும்பத்தில் ஒருவராகவே பழகுவார்”.

மேலும், “அவர் தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும், அதாவது அவர் மனைவி தான் அவருக்கு முதல் குழந்தை என்றும் கூறுவர். செட்டில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் வந்து கவனிப்பார் அப்படியே ரஜினிகாந்த் போன்ற குணம் உடையவர்” என்று சுமித்ரா கூறியுள்ளார்.

Exit mobile version