தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை நிவேதா பெத்துராஜை (Nivetha Pethuraj), அவரது கருத்துக்களுக்காகச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அந்தப் போராட்டத்தில் நிவேதா பெத்துராஜ் “ஒரு நாய் கடிக்கிறது என்றால் அதை மீடியாவில் செய்தியாகச் சொல்லும்போதே அதற்கான தீரவையும் சொல்லுங்க. ஒரு நாய் கடிக்குதுனா அதை பெரிய விஷயம் ஆக்கி பயத்தை உருவாக்குகிறார்கள். பயத்தை உருவாக்குவதற்கு பதில் அதற்குத் தீர்வு கொடுங்கள்.”
“நாயை முற்றிலுமாக ஒழித்துவிடுவது தீர்வு கிடையாது. நாயைப் புடித்து ‘ஷெல்டர்’ல் (shelter) போடச் சொல்கிறார்கள். அந்தப் பணத்தை நாய்க்குத் தடுப்பூசி போடப் பயன்படுத்துங்கள்.”
“நாயை அரசு பாதுகாக்க வேண்டும், அதற்காகத்தானே ஓட்டு போடுகிறோம். ஒரு நாய் கடிக்கிறது என்றால் அதில் இருந்து தற்காத்துக்கொள்ளக் குழந்தைக்குக்கூடச் சொல்லிக் கொடுங்கள்.”
நாய்களுக்கு மட்டும் ஆதரவாக நிவேதா பெத்துராஜ் பேசி இருப்பதற்கு, தெரு நாய்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.
“ரோட்டில் நடந்து போகிறவர்களுக்குத் தான் தெரியும். காரில் செல்பவருக்கு நாய்கள் பிரச்சனை பற்றி என்ன தெரியும்?” என அவரை நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டமானது, நாய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

