அந்த விஷயம் கடினமாக இருந்தது.. இயக்குனர் ஷங்கர் குறித்து பேசிய கியாரா அத்வானி!!

24 66587d75af7c7

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நவீன் சந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கியாரா அத்வானி கேம் சேஞ்சர் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், இதுவரை, தான் நடித்ததிலேயே மிகவும் சவாலான பாடல் காட்சி “ஜரகண்டி” என்றபாடல் காட்சி தான். ஒரு பாடலுக்கு 10 நாட்கள் ஷூட்டிங் இருந்தது. நடன இயக்குனர் பிரபு தேவா கஷ்டமான ஸ்டெப்ஸ் போட வைத்தார். அது கொஞ்சம் கடினமாக இருந்தது.

எனக்கு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. கமர்ஷியல் படங்களில் தனித்துவமான அனுபவங்களை உருவாக்குவார். மிகவும் கடுமையாக உழைப்பார். அவரது அர்ப்பணிப்பையும் படமாக்கும் அணுகுமுறையையும் வியப்பாக இருக்கிறது என்று கியாரா அத்வானி கூறியுள்ளார்.

Exit mobile version