சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’ திரைப்படத்தின் இயக்குநர் நரேஷ் குப்பிலி மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். அவர் தன்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தான் சந்தித்ததில்லை என்றும், ஆனால் இந்தக் குறிப்பிட்ட இயக்குநர் “எல்லை மீறிவிட்டார்” என்றும் திவ்யபாரதி கூறினார்.
சமீபத்தில் இயக்குநர் நரேஷ் குப்பிலி, சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் திவ்ய பாரதியை கேலி செய்யும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார். அவரது கருத்துகளை திவ்ய பாரதி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
படப்பிடிப்புத் தளத்தில் நடத்தை: இந்த இயக்குநரின் நடத்தை படப்பிடிப்புத் தளங்களிலும் அப்படித்தான் இருந்ததாகவும் திவ்யபாரதி தெரிவித்தார்.
‘கோட்’ படப்பிடிப்பின் போது இயக்குநர் நரேஷ் குப்பிலியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, கதாநாயகன் சுதிகாலி சுதீர் மௌனமாக இருந்தது தன்னை ஏமாற்றமடையச் செய்ததாக திவ்யபாரதி குறிப்பிட்டார். நடிகரின் மௌனத்தால் இதுபோன்ற ஒரு மோசமான கலாசாரம் இன்னொரு நாள் தொடரும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடிக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் மூலம் திவ்யபாரதி தெலுங்கில் அறிமுகமாகிறார். நரேஷ் குப்பிலி இந்தப் படத்தின் இயக்குநராக இருந்தார்.
இயக்குநர் நரேஷ் குப்பிலி, தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையிலான நிதிப் பிரச்சினை காரணமாகப் படத்திலிருந்து விலகினார். இதனால் படம் நிறுத்தப்பட்டிருந்தது. சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

