amala down 1714295748
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் 9வது மாதத்தில் நடிகை அமலா பால் செய்த வேலை.. பாராட்டும் ரசிகர்கள்

Share

கர்ப்பமாக இருக்கும் 9வது மாதத்தில் நடிகை அமலா பால் செய்த வேலை.. பாராட்டும் ரசிகர்கள்

நடிகை அமலாபால் தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர்.

விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நாயகியாக இருந்தவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்தார்.

படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே திருமண செய்துகொண்டவர் பின் பிரச்சனைகளால் முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்றார்.

அதன்பிறகு படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய ஊர்கள் சுற்றி வந்தார், போட்டோ ஷுட்கள் நிறைய நடத்தினார்.

இவர் கடந்த வருடம் நவம்பர் 3ம் தேதி தனது நீண்டநாள் நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் அமலாபால் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் தயாரான ஆடுஜீவிதம் படம் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது, அதில் அமலாபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கிண்டர் ஹாஸ்பிடல்ஸ் சார்பாக நடைபெற்ற கர்ப்பம் மற்றும் தாய்மை பற்றிய விழிப்புணர்வு பேஷன் ஷோவில் நடிகை அமலாபாலும் கலந்துகொண்டு கலக்கியுள்ளார். அவரின் இந்த பேஷன் ஷோவிற்கு ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....