கவர்ச்சியான ரோலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

tamilni 39

கவர்ச்சியான ரோலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துவருகின்றனர். இந்த லிஸ்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இருக்கிறார்.

அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே அமைந்திருந்தன. இருப்பினும் இந்த படங்களில் போதுமான வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், படங்களில் கவர்ச்சியாக நடிப்பது பற்றி பேசியிருக்கிறார். அதில், கவர்ச்சி ரோலில் நடிக்க எனக்கு நிறைய அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . ஆனால் நான் அந்த கதைகளை தேர்வு செய்யவில்லை.

அதற்கு காரணம், என்னை பொறுத்தவரை எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் சமூக பொறுப்பு, குடும்பங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

Exit mobile version