24 6617a9e803b71
சினிமாசெய்திகள்

பிரம்மாண்டமாக தயாராகும் கங்குவா படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற சூர்யா- எவ்வளவு தெரியுமா?

Share

பிரம்மாண்டமாக தயாராகும் கங்குவா படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற சூர்யா- எவ்வளவு தெரியுமா?

சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் கங்குவா.

சிவா அவர்களின் இயக்கத்தில் சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

இதில் சூர்யா நாயகனாக நடிக்க திஷா படானி, பாபி தியோல், நட்ராஜன், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை, அதோடு படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா 6 கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா ரூ. 28 கோடி வரை குறைவான சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

காரணம் 24 படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக போதிய கலெக்ஷன் பெறவில்லை. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

அப்பட நஷ்டத்தை ஈடுசெய்ய கங்குவா படத்திற்காக சூர்யா குறைவான சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ரம்ஜான் தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் ஸ்பெஷல் வீடியேோவை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...