இலங்கையை மையப்படுத்தி நடிகர் சசிகுமாரின் அடுத்த அதிரடி.. உண்மை சம்பவமா?

3 33

சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

3வது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது.

டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் ப்ரீடம் என்ற படம் தயாராகியுள்ளது, வரும் ஜுலை 10ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாம்.

கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோஸ் ஜோஷ் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார்.

டூரிஸ்ட் பேமிலி எப்படி இலங்கை பின்னணி கொண்ட கதையாக அமைந்ததோ அதேபோல் இந்த படமும் இலங்கையில் 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாக கொண்டதாம்.

அதாவது ராஜீவ்வை கொல்ல அனுப்பப்பட்ட மனித வெடிகுண்டு பெண்ணின் கதை என்பதை டீசரிலேயே வெளியிட்டிருந்தார்கள்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

Exit mobile version