vbk rajasekar hhotstar
சினிமாசெய்திகள்

மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.. இப்படியொரு சோகமா?

Share

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்ன பிரச்சனை நன்றாக சம்பாதிப்பார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது.

ஆனால் எல்லா பிரபலங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைவது இல்லை, சினிமாவில் சாதித்தாலும் சொந்த வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நிழல்கள் படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கியவர் ராஜசேகர்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் வந்து சீரியல்களிலும் நடித்து வந்தார்.

தனது மனைவி தாராவுடன், வங்கியில் கடன் வாங்கி ஆசை ஆசையாய் சென்னை வடபழனியில் வீடு ஒன்றை கட்டி வாழ நினைத்துள்ளார், ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் வங்கியில் கடனை கட்டச் சொல்லி தாராவிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவர் இறப்பிற்கு பிறகு இருந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயன்றபோது அதையும் சிலர் ஏமாற்றியுள்ளனர்.

கோர்ட்டில் ஜப்தி ஆர்டர் கொடுக்கப்பட்டதால் கோர்ட்டு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ராஜசேகர் மனைவி தாராவை வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் நடிகர் சங்கத்தை நாடியுள்ளார், தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...