அனிமல் பட இயக்குனருடன் இணைந்த நடிகர் பிரபாஸ்.. அடேங்கப்பா படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

24 66ecfc550aad4

அனிமல் பட இயக்குனருடன் இணைந்த நடிகர் பிரபாஸ்.. அடேங்கப்பா படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். பல வெற்றி படங்களில் நடித்த இவர், பாகுபலி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பாகுபலி படத்தை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இந்த நிலையில், அடுத்து அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.

தற்போது, படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது என கூறப்படுகிறது.

இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக ரூ. 500 கோடி பட்ஜெட்டில் சந்தீப் ரெட்டி வங்கா உருவாக்க உள்ளதாகவும், பிரபாஸ் டானாவும்,போலீசாகவும் இரண்டு கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் நடிகை திரிஷா வில்லியாக நடிக்கவுள்ளார் என கூறப்படும் நிலையில், படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version