1 2 scaled
சினிமா

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ

Share

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டியன், கிழக்கு சீமையிலே, விருமாண்டி, ஐயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தனக்கென்று தனி அடையாளத்தை சினிமாவில் உருவாக்கிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டார். ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் என நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிகையும் கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் “அன்புள்ள நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே, ஜூலை2ஆம் நாள் நேற்று காலையில் எனது சகோதரர்களுடன் சென்று, நமது மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து எனது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்‌ஷயா என்கிற பெண்னுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்துக்களை பெற்ற மகிழ்வான தருணம்…!” என பதிவு செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...