விஜய்கிட்ட இருந்து அந்த விஷயத்தை கத்துக்கணும்!! மைக் மோகன் பேட்டி..

24 665aefa1b1e88

80, 90 களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் மைக் மோகன். சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், இப்போது மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார்.

தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு மைக் மோகன், விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்த வெங்கட் பிரபு அவர்களுக்கு ரொம்ப நன்றி.

விஜய் ரொம்பவே அமைதியான மனிதர், அமைதியாகவே இருப்பார். இந்த ஒரு விஷயத்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைக்கிறன் என்று மைக் மோகன் கூறியுள்ளார்.

Exit mobile version