தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக, ஒவ்வொரு படத்திற்கு வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி.
பருத்திவீரன் படத்தில் துவங்கிய இவரது பயணம் ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, மெட்ராஸ், கடைக்குட்டி சிங்கம், கைதி, தீரன், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
கடந்த ஆண்டு மெய்யழகன் வெளிவந்து நம் மனதில் இடம்பிடித்தது. அடுத்ததாக சர்தார் 2 மற்றும் வா வாத்தியாரே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.
இன்று நடிகர் கார்த்தியின் 48வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்குமாம். இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 8 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.