அட நடிகர் துல்கர் சல்மானின் மகளா இவர், நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே? வைரலாகும் போட்டோஸ்

4ee2b9bcf25a8cdc54de52b566e31cd8

அட நடிகர் துல்கர் சல்மானின் மகளா இவர், நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே? வைரலாகும் போட்டோஸ்

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

பர்டூ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர், படிப்பை முடித்தவுடன் துபாயில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

ஆனால் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர் 2012ல் செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

அதன்பின் உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேஸ், சார்லி, குரூப் போன்ற படங்கள் அவரை முன்னணி நாயகனாக முன்னேற வைத்தது. நடிகர் என்பதை தாண்டி நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார் துல்கர் சல்மான்.

நடிகர் துல்கர் சல்மான் அமல் சூபியா என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு மரியம் என்ற அழகான மகள் உள்ளார். அவர் அண்மையில் தனது 7வது பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு துல்கர் சல்மான் வாழ்த்து கூறியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் துல்கர் மகளா இவர் நன்றாக வளர்ந்து ஆளே மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version