இயக்குநர் முரளி கிருஷ் இயக்கத்தில், நடிகர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 30-ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நாயகனாக தினேஷ் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய மற்றும் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அட்டகத்தி, விசாரணை போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதித்த தினேஷ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் ஜல்லிக்கட்டு வீரனாகத் தோன்றுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ள சூழலில், இந்தத் திரைப்படம் ஜனவரி மாத இறுதியில் வெளியாவது வணிக ரீதியாகப் படத்திற்குப் பலம் சேர்க்கும் எனத் திரையுலகினர் கருதுகின்றனர்.

