நடிகர் தனுஷ் – ஜஸ்வர்யா விவாகராத்தாம்!!

ISHWARYA DHANUSH

நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மகளும் தனுஷுன் மனைவியுமான ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பர அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில், “நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம்.

எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.

தனுஷ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த 2000களில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version