கரூர் சம்பவம்: ‘விஜய்க்கு எதிராக மாற்ற முயலும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது’ – அஜித் குமார் விளக்கம்!

maannewsimage01112025 030648 n68724757117619661199499ae0a3d504106ffe0c3bf21e538831d0639850bf368f592d1f255f4f6d1a3090

நடிகர் அஜித்குமார் அண்மையில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கரூர் அசம்பாவிதம் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்தார். அதில், கரூர் அசம்பாவிதத்திற்கு நடிகர் விஜய் மட்டும் காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், அவர் ஆங்கிலத்தில் பேசிய கருத்துகள் சிலரால் விஜய்க்கு எதிரான கருத்து என்பது போல் திரித்துப் பரப்பப்பட்ட நிலையில், அஜித்குமார் தற்போது தனது பேட்டி தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.

“ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டி இளைஞர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு எதிராக, ஒருசிலரால் அவர்களது ‘அஜென்டாவிற்கு’ ஏற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளது என எனக்குத் தெரியும். இங்கு எதை எடுத்தாலும் பரபரப்பாக்கத்தான் முயல்வார்கள்.”

நான் நேர்மறையான எண்ணங்களுடன் எனக்குப் பிடித்த பாதையில் பயணிக்க விரும்புகிறேன்..

ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள், அரசியல் பத்திரிகையாளர்கள் எனத் தனித்தனியாக இருந்தனர். ஆனால், இன்று அரசியல் பத்திரிகையாளர்களை விட ஒரு சில சினிமா பத்திரிகையாளர்களே அரசியல்மயமாகி உள்ளனர்.

Exit mobile version