3,000 கோடி சொத்துக்களைத் தானமாக வழங்கிய ஜாக்கி சான்:மகன் சொன்ன வார்த்தை!

images 6 4

உலகப் புகழ்பெற்ற சாகச நடிகர் ஜாக்கி சான், உயிரைப் பணயம் வைத்து டூப் போடாமல் நடித்துச் சம்பாதித்த தனது சுமார் ரூ. 3,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கான அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கிய சம்பவம் அண்மையில் செய்திகளில் வெளியாகிப் பலரது பாராட்டுகளைப் பெற்றது.

இந்தச் செய்தியைக் கேட்ட ரசிகர்கள் “பணம் வைத்திருக்கும் பலருக்கும் இந்த மனசு இல்லை” என்று ஜாக்கி சானை வாழ்த்திய நிலையில், தான் தானமாக வழங்கிய சொத்துகள் குறித்துத் தனது மகன் ஜேசி சான் என்ன கூறினார் என்பதை ஜாக்கி சான் தற்போது வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஜாக்கி சான் கூறியதாவது, “என்னுடைய ரூ. 3,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் நான் ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கி விட்டேன். இதை பற்றி என் மகனிடம் ‘உனக்கு எவ்வித வருத்தமும் இல்லையா?’ என்று கேட்டேன்.”

“அதற்கு என் மகன் ஜேசி சான் ‘நானும் திறமைசாலிதான், தானாகவே உழைத்து பணம் சம்பாரிக்க விரும்புகிறேன். நீங்கள் சம்பாதித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காகக் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பிறர் உதவியின்றி உழைப்பின் மூலம் நானும் முன்னேற ஆசைப்படுகிறேன்’ என்று கூறிவிட்டான்,” என்றார்.

ஜாக்கி சானின் மகனின் இந்தப் பொறுப்பான மற்றும் சுயமுயற்சியைத் தூண்டும் வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version